எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு மாநில அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள நிலை தொடர்பாகவும், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனையின்போது தமிழகத்தின் இறுதிவாக்காளர் பட்டியல் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிக்கு தேர்தல் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…