2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் அன்போடு பாஜக ஆட்சிக்கு வரும்போது இந்து அறநிலையத்துறை என்ற அமைப்பே இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், இந்து அறநிலையத்துறையில் தொடர்ந்து கோயில்களில் கட்டணத்தொகையை அதிகரித்து வருவதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருவதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, தமிழகத்துக்கு அறநிலையத்துறையே வேண்டாம் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன்.
இதற்கு மேலும் ஒரு காரணமும் இன்று அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை எதற்கு வேண்டும், கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவேண்டும் என்றால், அனுமதி வாங்கிக்கொண்டு வர சொல்லுறார்கள், குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டைக்கு அனுமதி கேட்டுக்குறார்கள். எல்இடி திரையில் நேரலையில் ஒளிபரப்ப செய்ய அனுமதி வேண்டுமென சொல்லுறாங்க, இதுபோன்று கோயில்களில் வழிபட எல்லாவற்றுக்கும் அனுமதி கேட்கப்படுகிறது.
புதுச்சேரியில் பரபரப்பு! திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்குமாடி கட்டிடம்!
இதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்துக்கு தேவையில்லாத ஒரு அமைப்பு என்றால் அது இந்து அறநிலையத்துறை தான். அதனால், எங்களை பொறுத்தவரை நங்கள் தெளிவாக இருக்கிறோம். இதனை மக்கள் மன்றத்திலும் வைத்துள்ளோம். அதாவது, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் அன்போடு பாஜக ஆட்சிக்கு வரும்போது, இந்து அறநிலையத்துறை இருக்காது. இதுதான் எல்லாவற்றுக்குமான பதில். எங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை, 2024 நாடாளுமன்ற தேர்தல் தான் திமுகவுக்கு அழிவின் ஆரம்பம். இந்த ஆணவத்தின் ஆரம்பம் நாடாளுமன்றம் தேர்தல் தான். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபோது, திமுக படுதோல்வியை சந்தித்தது. இதுபோன்று வரும் நாடாளுமன்ற தேர்தல் திமுகவின் அழிவுனுடைய ஆரம்பமாக இருக்கும் என திமுகவை கடுமையாக விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…