தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், நேற்று முதல், தேர்வு எழுதுபவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் நீட் தேர்வு குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘என்னை பொறுத்தவரையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. ஆனாலும், இன்றைக்கு சட்ட ரீதியாக வேறு வழி இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இதில் இருந்து வெளிவர தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை இந்த ஆண்டே எடுத்து, அதில் வெற்றி பெறுவார்களா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், வருங்காலத்திலே நீட் தேர்வை விட்டு தமிழ்நாடு விலகுவது தான், தமிழக கிராம புற மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சரியாக இருக்கும்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…