தமிழ்நாடும் – தி.மு.கழகமும் இதை ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.
நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ராசியில் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும், இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும், இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்” என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் New India Assurance வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உதட்டளவில் தமிழ் – தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாடையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும் – தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது. இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
“இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் – இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும் – இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்” என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் @NewIndAssurance வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உதட்டளவில் தமிழ் – தமிழர் என…
— Udhay (@Udhaystalin) June 12, 2023