நாளை 13 மாவட்டங்களில் கனமழை – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை.!
தமிழ்நாட்டில் நாளை (நவ.,8)13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதன்படி, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் மேம்பாலம், பெருங்களத்தூர் மேம்பாலம், தாம்பரம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் நாளை (நவ.,8)13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 மாவட்டங்களில் கனமழை
அதன்படி, மதுரை , ராமநாதபுரம் , விருதுநகர், சிவகங்கை, தென்காசி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவாரூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவலரிந்து விழிப்புடன் இருங்கள். எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருங்கள்! நேரலை #வானிலை அறிவிப்புகள், பேரிடர் #எச்சரிக்கைகள், வெள்ள #முன்னறிவிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் 24×7 தகவலைப் பெறுங்கள்.@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @KKSSRR_DMK @tnalertofficial pic.twitter.com/BatQUtXL2Y
— tnsdma (@tnsdma) November 7, 2024