“தமிழ்நாடு நாள்:குழந்தையின் பிறந்த நாளில்தான் கொண்டாட வேண்டும்,பெயர் சூட்டப்பட்ட நாளில் அல்ல” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

Default Image

நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.அதன்படி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இதற்கு,பிற அரசியல் தலைவர்கள் ஆதரவும் ,எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,குழந்தையின் பிறந்த நாளானது,அக்குழந்தை பிறந்த நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும்.மாறாக,குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்ட நாளில் அல்ல.எனவே,தமிழ்நாடு நாள் நவம்பர் 1 ஆம் தேதியாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாகக் கொண்ட முந்தைய அரசின் முடிவை இப்போது ஜூலை 18-ஆம் தேதியாக மாற்றுவதன் மூலம் தேவையற்ற சிக்கலை திமுக அரசு உருவாக்குகிறது.‘குழந்தையின் பிறந்த நாள் எப்போதும் குழந்தை பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது, குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்ட நாளில் அல்ல’.

நவம்பர் 1, 1956 அன்று, மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் மற்றும் அதிகாரப்பூர்வமாக மாநிலத்தின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.ஜூலை 18, 1967 அன்று தமிழ்நாடு என்று பெயர் வழங்கப்பட்டது.அதன்படி,’தமிழ்நாடு நாள்’ நவம்பர் 1 ஆம் தேதியாகதான் இருக்க வேண்டும்.

எனவே,நவம்பர் 1 ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாளாக’ திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும்”,என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்