தமிழ்நாடு நாள்: தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, முதன்மை மாநிலமாக உயர்த்த, தமிழ்நாடு நாளில், தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடுநாள்.

இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை நாம் சகோதர உணர்வுடன் ஏற்றுக் கொண்டோம். நமது நிலப்பரப்பை சகோதர மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தோம். நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன.

திருத்தணியும் தென்குமரியும் தமிழ்நாட்டில் எளிதில் இணைந்துவிடவில்லை.! முதல்வர் நெகிழ்ச்சி பதிவு.!

அதனால் தான் கூறுகிறேன்… மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம். தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 01.11.1956 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், இந்த நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருவதையும், மதுவுக்கு அடிமையாகி குடிகார மாநிலம் என்று தூற்றப்படுவதையும் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

live : பரபரக்கும் வக்பு மசோதா விவகாரம் முதல்…ட்ரம்ப் போட்ட அதிரடி வரி வரை!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…

18 minutes ago

அதிரடி வரி போட்ட டொனால்ட் டிரம்ப்! “கண்டிப்பா பதிலடி இருக்கு”… கனடா, ஐரோப்பியா திட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…

1 hour ago

ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!

மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…

1 hour ago

அப்போ சரியா செஞ்சேன் இப்போ இல்லை…ஜாகீர் கானுடன் புலம்பிய ரோஹித் சர்மா!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை..இன்று இந்த 17 மாவட்டத்திற்கு அலர்ட்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…

2 hours ago

கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!

புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

3 hours ago