காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கம்.
ட்விட்டர் கணக்கு முடக்கம் – காங்கிரஸ் புகார்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு சமூக வலைத்தள பக்கத்தை திடீரென மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சமூக விரோத செயல்கள் நடக்கும் முன்பு ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் மூலம் மக்களுடன் தொடர்பு:
பிரதான அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் கட்சியின் செயல்பாடு, தலைவர்கள் பேச்சு, என பல்வேறு விதமாக மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்துகிறது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு சமூக வலைதள பக்கங்களை வைத்துள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினரும் ட்விட்டர் மூலம் மக்களுடன் தொடர்பில் உள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, முக்கிய தலைவர்களின் பேச்சுகள், சிறுபான்மை மக்களுக்காக காங்கிரஸ் கட்சி செய்த திட்டங்கள், செயல்பாடு குறித்த விபரங்கள் @TNCCMinority இந்த ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன.
அரபு மொழியில் பயாே விபரங்கள்:
இந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் திடீரென்று மர்ம நபர்களால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. முடக்கம் செய்யப்பட்டுள்ள மிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் wow store எனும் முகப்பு போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரபு மொழியில் பயாே விபரங்கள் எழுதப்பட்டுள்ளது. அதில், நவீன செல்போன் மற்றும் சோனி சாதனங்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டோர் இது. நீங்கள் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம் எனும் வகையில் பயோவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவல் ஆணையரிடம் புகார்:
இந்த நிலையில், சமூக விரோத செயல்கள் நடக்கும் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா புகார் கொடுத்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…