தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!
தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா.
தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் இன்று மாலை 5.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் திரு. ஜி.கே. தாஸ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் திரு. ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்நிகழ்வில், தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், கிறிஸ்துவ மத தலைவர்கள், பேராயர்கள், ஆயர்கள், இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதபோதகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.