தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் தலா ரூ.1 கோடி வழங்குவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் , பரவாமல் தடுக்கவும் மத்திய ,மாநில அரசுகள் பல முயற்சிகளை செய்து வருகிறது.
இதில் முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி மூலம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 3,750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இதையெடுத்து தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடிவழங்குவர் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். இந்த நிதியை மக்களவை உறுப்பினர்கள் தங்களது மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்குவார்கள் என கூறினார்