ஓமலூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்களம் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ. அமீர்கான் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மோகன்குமார மங்களம் ஒமலூர் தொகுதியில் கைச்சின்னத்தில் போட்டி இடுகிறார்.
சேலம் பகுதி சிறு குரு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறைந்த பகுதி மத்திய மோடி அரசின் தவரான மேலாண்மை, பொருளாதார கொள்கை , பண மதிப்பிழப்பு , வரிவிதிப்பு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை இழந்துள்ளனர் அரசின் தவரான கொள்கை யினால் நாடு பாதிக்கப்படும் என பொருளாதார மேதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் எச்சரிக்தார்.
ஆனால் 6 மாதத்தில் பொருளாதாரம் மேம்படும் வருடத்திற்க்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என பொய் வாக்குறுதியை பிரதமர் மோடி கொடுத்தார். எந்த இளைஞர்க்கும் நாட்டில் வேலை கிடைக்கவில்லை மாறாக லட்ச கணக்கில் வேலையை இழந்துள்ளனர். மோடியின் எடுபிடியாக ஏவல் அரசாக தமிழக எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பாடற்று உள்ளது. இந்த அரசு மாற்றப்பட தமிழகம் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்பு கிடைத்திட மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என தெரிவித்தார்.
பிரச்சார நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மைதுறை ஒருங்கிணைப்பாளர் எல்.எக்ஸ்.ஏ சார்த்தோ தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் வாழப்பாடி இராம . சுகந்தன் தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் , ஒமலூர் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் சுரேஸ் சென்னை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சாதிக் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…