தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!  

தூத்துக்குடியில் தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பூங்காவை திறந்துவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tamilnadu CM MK Stalin inaugurated Thoothukudi mini Tidle park

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பார்க் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.

ரூ.32.5 கோடி  மதிப்பீட்டில் இந்த டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது. சுமார் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த கட்டடம் 4 தளங்களை கொண்டுள்ளது.  இதில், பல்வேறு ஐடி நிறுவனங்கள், உணவு கூடங்கள், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளை இந்த டைடல் பார்க் கொண்டுள்ளது.

இதனை திறந்து வைக்கவும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வந்திருந்தார். இன்று பிற்பகல் வந்திருந்த முதலமைச்சர், தற்போது தூத்துக்குடி – திருச்செந்த்தூர் சாலையில் புதியதாக கட்டமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன், தூத்துக்குடி எம்பி கனிமொழி, திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா பெ.கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்