சிறை கைதிகளுக்கு தனது புத்தகங்களின் தொகுப்பை வழங்கினார் தலைமைச் செயலாளர் இறையன்பு.!
சிறை கைதிகளுக்கு தான் எழுதிய புத்தகங்களின் தொகுப்பை தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ.இறையன்பு வழங்கினார்.
அண்மையில் சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது சிறைக்கைதிகளுக்கு கனிமொழி எம்பி உள்ளிட்டோர் புத்தகங்களை தனமாக வழங்கினர்.
அதே போல தற்போது சிறை கைதிகளுக்கு தான் எழுதிய புத்தகங்களின் தொகுப்பை தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ.இறையன்பு தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியிடம் வழங்கினார்.
போர்த்தொழில் பழகு, படிப்பது சுகமே, மூளைக்குள் சுற்றுலா, சிம்மாசன சீக்ரெட் என பல்வேறு புத்தகங்களை வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.