ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்.
உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகப் போராக மாறும் பேரபாயம்! பேரபாயம்!! ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும்! தமிழ்நாடு முதலமைச்சரின் மின்னல் வேகப் பணி பாராட்டத்தக்கது – வரவேற்கத்தக்கது!’ பதிவிட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…