தமிழ்நாடு முதலமைச்சரின் மின்னல் வேகப் பணி பாராட்டத்தக்கது – வரவேற்கத்தக்கது! – கி.வீரமணி

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்.
உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகப் போராக மாறும் பேரபாயம்! பேரபாயம்!! ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும்! தமிழ்நாடு முதலமைச்சரின் மின்னல் வேகப் பணி பாராட்டத்தக்கது – வரவேற்கத்தக்கது!’ பதிவிட்டுள்ளார்.
உலகப் போராக மாறும் பேரபாயம்! பேரபாயம்!!
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும்!
தமிழ்நாடு முதலமைச்சரின் மின்னல் வேகப் பணி பாராட்டத்தக்கது – வரவேற்கத்தக்கது!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) February 25, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025