இராமசாமி படையாச்சியார் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ட்வீட்.!
இராமசாமி படையாச்சியார் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.
காமராஜர் ஆட்சியில் 1954-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், இந்திய சுதந்திர போராட்ட வீரர், சமூக நீதிக்காக பாடுபட்டவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் அவர்களது 103-வது பிறந்தநாளில் அவரது சேவையை நினைவு கூர்ந்து வணங்குகிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர், சமூக நீதிக்காக பாடுபட்டவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் அவர்களது 103-வது பிறந்தநாளில் அவரது சேவையை நினைவு கூர்ந்து வணங்குகிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 16, 2020