#Breaking:புதுச்சேரி துணைஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் பிறந்த நாளுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின்,வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதனை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில்,புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து,முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொ) திருமதி.தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.சகோதரி தமிழிசை சவுந்தரராசன் அவர்கள் பொதுவாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!”,என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொ) திருமதி. @DrTamilisaiGuv அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
சகோதரி தமிழிசை சவுந்தரராசன் அவர்கள் பொதுவாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) June 2, 2021