“கோடிக்கணக்கான குடிமக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து சேவை” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் அவர்கள் இன்று தனது 89 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து,பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.கோடிக்கணக்கான குடிமக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து நம் நாட்டுக்கு நீங்கள் செய்த சேவை மற்றும் பொருளாதார மந்த நிலையின் போது நீங்கள் ஆற்றிய முக்கிய பங்கை யாராலும் மறக்க முடியாது”,என்று வாழ்த்தியுள்ளார்.
Hearty birthday greetings to our former Prime Minister Dr. Manmohan Singh.
The yeoman service you rendered to our country by lifting millions of citizens from poverty and the crucial role you played during the period of recession can’t be forgotten by anyone. #HappyBirthdayDrMMS
— M.K.Stalin (@mkstalin) September 26, 2021
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் :
1991-96 ஆம் ஆண்டில் பிவி நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கிய பங்கு வகித்த பெருமை இவருக்கு உண்டு.இந்தியாவின் 13 வது பிரதமராக 2004 முதல் 2014 வரை பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர், சிங் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் ஆவார். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு முதல் ஐந்து வருட காலத்தை முடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும் சிங் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.