#Breaking:இனி ஏப்ரல் 14 “சமத்துவ நாளாக” கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும்,அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி எனவும்,வேண்டியதை சேர்த்த ஓவியர் எனவும் புகழாரம் சூட்டிய முதல்வர்,அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கையை ஏற்று இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025