தமிழக முதல்வர் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் – அண்ணாமலை

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கவர்னர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கிருக்க கூடிய தொண்டர்கள் நடத்திய தாக்குதல்  கிடையாது. மூன்று நாட்களாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்கள் கொடுத்த ஊக்கத்தால் தான் அங்கிருக்க கூடிய தொண்டர்கள் நடத்திய தாக்குதல். அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்