இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு புறப்படுகிறார்

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் .
முதலமைச்சர் பழனிசாமியின் பயண விவரம்: இன்று ( 28-ஆம் தேதி) சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் செல்கிறார். அங்கிருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி புறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார்.அங்கு கலிபோர்னியாவில் கால்நடை பண்ணை பார்வையிடுகிறார். பின்னர் அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில் 8, 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.இறுதியாக 10-ம் தேதி தமிழகம் திரும்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி.