100 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து வருகிறது தமிழகம்-முதலமைச்சர் பழனிசாமி

எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், உலகம் போற்றும் விவசாயி எம்.எஸ் சாமிநாதன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
அதிக மகசூல் தரும் பயிர்களை உற்பத்தி செய்து வேளாண் துறையில் தன்னிறைவை ஏற்படுத்திய காரணத்தினால் பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். இலாப நோக்கமற்ற இந்நிறுவனம் கிராமபுர பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேளாண்மை தொடர்பான பணிகளை 30 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து வருகிறது தமிழகம். 4 முறை மத்திய அரசின் க்ருஷி கரமான் விருதை தமிழகம் பெற்றுள்ளது. பருவ மழை பெய்ததின் காரணமாக தண்ணீர் பிரச்சனை தீர்க்க ஏரி குளங்கள் சீர் செய்யப்பட்டு குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
30 ஆண்டுகள் லீஸ் கால அவகாசம் நிறைவடைய உள்ளதால் அதை நீட்டித்து தர வேண்டும் என்று இந்து ராம் குறிப்பிட்டார். இது அரசின் பரிசீலனையில் உள்ளது .விரைவில் அரசு எம்.எஸ் ஸ்வாமிநாதன் அரகட்டளை ஒப்பந்தத்தை கால நீட்டிப்பு செய்யும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025