தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதல்வர் பட்நாயக்வுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மருத்துவ குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவுகள் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதுபோன்று இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபின் பேசிய மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர், தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என்றும் பாதிப்பு குறைவாக உள்ள சில பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த முதல்வரிடம் ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனிடையே முதல்வர் பழனிசாமி, ஒடிசா முதல்வர் பட்நாயக்வுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வர்களும் கலந்து ஆலோசித்து கொண்டனர். மேலும் தமிழகத்தில் ஒடிசா தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து முதல்வர் பட்நாயக் கேட்டு தெரிந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…