அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை.
இன்று தமிழக முதல்வர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் .
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலயில் கொரோனா குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இன்று தமிழக முதல்வர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் .
நாளை மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா.? அல்லது தளர்வுகள் வழங்குவதா..? என்பது குறித்து ஆலோசனை முதல்வர் பழனிசாமி மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.