எனது கனவு திட்டமான திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தது என் வாழ்வின் பொன்னாள் ஆகும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சென்னை, கலைவாணர் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற பெயரில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். எனது கனவு திட்டமான திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தது என் வாழ்வின் பொன்னாள் ஆகும். கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை செயலில் திறமையானவர்களாக மாணவர்கள் இளைஞர்களை மாற்றவே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள படிப்பில் சேர்ந்து பட்டம் பெறுவதுடன் அது குறித்து முழு தெளிவு பெற வேண்டும்.
படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக இல்லாமல், வேலை சார்ந்ததாக மாறவேண்டும். மூன்று பட்டங்கள் பெற்றவர்கள் கூட நான்கு பேர் முன்பு பேச தயக்கம் காட்டுகிறார்கள், இளைய சக்தியை முழுமையான திறமையானவர்களாக மாற்ற நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சிகள் வழங்கப்படும். நான் முதல்வன் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் உரக்கச் சொல்லும் போது உங்களுக்குள் நம்பிக்கை பிறக்கும். நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என மனதிற்குள் இருக்கும் தடையை அகற்றும் நோக்கில் நான் முதல்வர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மொழித் திறமையை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படும். இன்று முதல் நீங்கள் புதிய மனிதர்களாக மாறபோகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…