ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்!
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்றிருந்தால்,அக்கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது.
அதனடிப்படையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில்,திமுக கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில்,வருகின்ற ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளார்.டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதையடுத்து, அதனை திறந்து வைக்க முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வரான பிறகு 3-வது முறையாக மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.