நங்கள் சந்தித்து கொண்டது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அரசியல் ரீதியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகிய இருவரும் கூறி மறுத்துள்ளனர்.
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் டிஆர்.பாலு, துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.
இந்த சந்திப்பு முடிந்ததும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘ மம்தா பேனர்ஜி அவர்கள் பல முறை சென்னைக்கு வந்துள்ளார். குறிப்பாக கலைஞர் சிலையை முரசொலி அலுவலகத்தில் திறந்து வைக்க வந்துள்ளார். வந்து திமுகவையும், தமிழத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவுக்கு வந்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. மேலும்,, நீங்கள் அவசியம் மேற்கு வங்கதிற்கு வர வேண்டும் என என்னை அழைத்துள்ளார். நாங்கள் நாடாளுமன்ற தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை.’ என திட்டவட்டமாக கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
அடுத்ததாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, ‘ முதல்வர் ஸ்டாலின் எனக்கு சகோதரர் போன்றவர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. கவர்னர் அழைப்புக்காக தமிழகம் வந்துள்ளேன். அப்போது இங்கு (முதல்வர் இல்லத்திற்கு) வந்தேன். என கூறிவிட்டு, தமிழில் வணக்கம் கூறினார் மம்தா.
பிறகு, ‘ இந்த சந்திப்பில் நாங்கள் அரசியல் பற்றி பேசவில்லை.’ என திட்டவட்டமாக கூறி மறுத்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…