அடுத்த தலைமை செயலர் யார்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை.!
தமிழகத்தின் புதிய தலைமை செயலர் யார் என தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் உச்சபட்ச அரசு பதவியாக கருதப்படும் தலைமை செயலாளர் பொறுப்புக்கு புதியதாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆலோசனையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் , மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது பொறுப்பில் இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு இந்த மாதம் 60வயது பூர்த்தி அடைவதை அடுத்து வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். அதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த லிஸ்டில் 13 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இம்மாதம் தான் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஓய்வு பெற உள்ளார் என்பதும் குறிப்பிலிடத்தக்கது. யுபிஎஸ்சி தேர்வு செய்து அனுப்பும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளில் இருந்து ஒருவரை தமிழக டிஜிபியாக தமிழக அரசு தேர்வு செய்யும். அதற்கான ஆலோசனையும் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது