INDIA கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் 13 பேரை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார். இதுபோன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால், தேஜஸ்வி யாதவ், லல்லன் சிங் ஹேமந்த் சோரன், சஞ்சய் ராவத், அபிஷேக் பானர்ஜி, ராக்வத் சத்தா, தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா உமர் அப்துல்லா இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மெகபூபா முப்தி, டி.ராஜா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இந்திய கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.