நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்!

Published by
பால முருகன்

நடிகர் ரஜினிகாந்த்  இன்று அவர்  தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  அவருக்கு திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சினிமா பிரபலங்களில் தனுஷ், குஷ்பூ, கமல்ஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதைப்போல அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்களின் மூலம்  தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து – கமல்ஹாசன்!

அவர்களை தொடர்ந்து தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்திற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்
அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்தை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Stalin congratulated Rajinikanth [file image]

Recent Posts

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

25 minutes ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

41 minutes ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

1 hour ago

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

3 hours ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

4 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

4 hours ago