ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து 2 வது நாளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று வெளியான அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரஜினியின் ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இருந்தாலும், ரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.
ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆகவே ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கேட்டறிந்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி நடிகர் ரஜினிகாந்திடம் நலம் விசாரித்துள்ளார்.இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஹைதராபாத், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களை நான் இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களை நான் இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 26, 2020