இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு – தமிழக முதல்வர் இரங்கல்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது மறைவு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார. அதில், இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் திரு. இராம. கோபாலன் அவர்கள் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். திரு. ராம கோபாலன் அவர்கள் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்
திரு. இராம கோபாலன் அவர்களை இழந்து வாடும், அவரது இயக்க தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. இரா. கோபாலன் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் திரு.இராம.கோபாலன் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
திரு.இராம.கோபாலன் அவர்களது பிரிவால்வாடும் அவரது இயக்கத் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/2WnIwz16J7
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 30, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)