சீமானின் தந்தை மறைவிற்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்..!
சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் சற்றுமுன் காலமானார். இதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் திரு.சீமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.