Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள்.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று நிறைவு பெற்றது. நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூம் எனப்படும் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழகத்தில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். இதன்பின் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்புக்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் வாக்கு சதவீதத்தில் குளறுபடியா? என கேள்வி எழுந்துள்ளது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வாக்கு சதவீதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.
வாக்கு சதவீதம் குளறுபடி குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் செய்தியாளர் சந்திப்பு இன்று ஒரே நாளில் 3 முறை தள்ளிப்போகி உள்ளது. அதாவது, இன்று காலை 11 மணிக்கு பிரஸ் மீட் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், ஒத்துவைக்கப்பட்டது. அதில் இருந்து 12 மணி, பிற்பகல் 3 மணி மற்றும் மாலை 5 மணி என தொடர்ந்து தேர்தல் அதிகாரியின் பிரஸ் மீட் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
ஏன் பிரஸ் மீட் தள்ளிவைக்கப்படுகிறது, துல்லியமான தேர்தல் நிலவரம் எப்போது தெரியும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இருப்பினும், இன்றைக்குள் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் குளறுபடி குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி,…
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று…
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக…