சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது , நீதிபதியோ கொந்தளிக்கிறார் – ஆளூர் ஷாநவாஸ்
சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது. நீதிபதியோ கொந்தளிக்கிறார் என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை.ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.
எனவே நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,H.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடே கேட்டது. நீதிமன்றமோ மன்னித்தது.ஆனால், சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது. நீதிபதியோ கொந்தளிக்கிறார். H.ராஜாஇழிவு செய்தபோது வராத கோபம்,
சூர்யா கேள்வி கேட்டதும் வருகிறதே! அது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்த நிலையில் அவருக்கு ஆதரவாக TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
H.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடே கேட்டது. நீதிமன்றமோ மன்னித்தது.
ஆனால், சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது. நீதிபதியோ கொந்தளிக்கிறார். @HRajaBJP இழிவு செய்தபோது வராத கோபம், @Suriya_offl கேள்வி கேட்டதும் வருகிறதே! அது எப்படி?#நீட்என்ற_மனுநீதிதேர்வு
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) September 14, 2020