தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்..!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்தும் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 2015 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழில்பேட்டை 2023 வெள்ளத்திலும் பாதிக்கப்பட்டது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்ததில்லை. உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்படும் போது கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை, எனவே தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது.
இனி மத்திய அரசு அறிவிக்கவும் முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநில பேரிடராக என மாநில அரசு அறிவிக்க நினைத்தால் அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிப்பார்கள். நிவாரண நிதியை வங்கி கணக்கு மூலம் வழங்கலாம். ஆனால் ஏன் ரொக்கமாக கொடுக்கிறீர்கள், ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படுத்தன்மை இருக்கும் என தெரிவித்தார். ரூ.6000 நிவாரண தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தாது ஏன் என கேள்வி எழுப்பினார்.