வரும் 22ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்.!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஜூலை 22ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் சனிக்கிழமை 22ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.