தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.. விவாதிக்கப்பட உள்ள விவரங்கள் என்ன?
சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, பொன்முடி வீட்டில் சோதனை, அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பாடு என பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விவரங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற காங்கிரஸ் ஏற்கனவே கோரிக்கை வைத்து.
இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயல்பாடு உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க, தொழில் நிறுவன விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.