தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு..!
மு.க. ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நிறைவுபெற்றது.
மு.க. ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கி அமைச்சரவை கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய திட்ட பணிகள் ,மக்கள் நலப் பணிகள், கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை குறித்தும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கொரோனாவால் இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெம்டிசிவர் மருந்துகள் அனைவருக்கும் உரிய முறையில் விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி ஆக்சிஜன் தொடங்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.