தமிழக பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல்.!
2023-24க்கான தமிழக பட்ஜெட், சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள வேளாண்மைத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 2-வது முழு பட்ஜெட் தாக்கல் மற்றும் அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும்.
இன்று தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2023-24க்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட, குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், உட்பட அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசுப்பணியில் காலியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள், சிறு குறு தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டுக்கான உரையை இன்னும் சற்று நேரத்தில் நிதி அமைச்சர் வாசிக்க உள்ளார்.