சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி (நாளை) 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி (நாளை மறுநாள்) தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
2-வது பட்ஜெட்:
சபாநாயகர் தலைமையில் அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பிறகு தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நாளை 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்:
இந்த பட்ஜெட்டில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாளை காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு நாளை பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் உள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…