தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் – மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு!
சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவு.
தமிழ்நாடு அரசின் 2023-24-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் வரும் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மின்வாரிய ஊழியர்கள் வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வரும் 20ம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் 20-ஆம் தேதி முதல் கூட்டத்தொடர் முடியும் நாள் வரை காலை 9.30 மணிக்கு அலுவலகம் வர மின்வாரிய ஊழியர்களுக்கு ஆணையிட்டுள்ளது.
மேலும், மின்வாரியம் சார்ந்த எந்த தகவலையும் அரசு கோரினால் உடனடியாக வழங்க தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரித்துள்ளது.