சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக பட்ஜெட் கூட்டதொடர் தொடங்கியது…!
சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக பட்ஜெட் கூட்டதொடர் தொடங்கியது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில், சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, கணினியில் பட்ஜெட்டை எவ்வாறு பார்ப்பது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். மேலும், காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் என்பது வரலாற்று சிறப்புமிக்கது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.