#BREAKING : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24ம் தேதி வரை நடைபெறும்- சபாநாயகர் அறிவிப்பு..!
அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்:
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார். பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த பின் நாளை காலை 10 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்:
அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். வரும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 24ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் மற்றும் முதலமைச்சரின் பதில் வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.