யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published by
லீனா

யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் உள்ளது என்று  விமர்சித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கி தான் தமிழ்நாடு பட்ஜெட். பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு ரூ.3 குறைத்துவிட்டு வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பார்கள்.  தேர்வுக்கு விலக்கு பெறுவதாக கூறி மாணவர்களை திமுக அரசு குழப்பிவிட்டது. பரிசீலிக்கிறோம், குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்றுதான் கூறுகிறார்கள்; தெளிவான நிலை இல்லை. அடுத்ததாக சொத்துவரி, பேருந்து, மின்கட்டண உயர்வு என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…

16 minutes ago

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…

1 hour ago

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

2 hours ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…

2 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…

2 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…

3 hours ago