தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பகல் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு முந்தைய ஆண்டின் முழு பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பின்னர், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 9.30 மணிக்கு தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். இதற்கு பிறகு, மார்ச் 15ஆம் தேதி தேதி காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
குறிப்பாக இந்த பட்ஜெட்டின்போது, பெண்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பட்ஜெட் அறிவிப்புக்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2025-2026-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-2025-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2025-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025