2024-25 தமிழக பட்ஜெட்…முக்கிய சிறப்பம்சங்கள்…முக்கிய அறிவிப்புகள்.!

Published by
கெளதம்

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் கீழ், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் அறிவித்து வருகிறார்.

  • புகழ்பெற்ற பழம்பெரும் தமிழ் நூல்களை மின்பதிப்பாக மாற்ற செய்ய 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • பல்வேறு மாநிலங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளவும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • பழங்குடி மக்களின் மொழி வளம் மற்றும் ஒலி வடிவங்களை பாதுகாக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க 17 கோடி ஒதுக்கீடு.
  • நவீனகால மரபியல் தொழில்நுட்பம் கொண்டு, தமிழர்களின் மரபு, இடம்பெயர்வு, பண்பாடு ஆகியவற்றை கண்டறிய 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்திற்கு 3500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,482 குக்கிராமங்களில் 1,147 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் உள்ள 5000 நீர்நிலைகளை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புக்கான திட்டத்தின் கீழ் பயனர்கள் பயன்பெறும் வகையில் 3300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் கிராமப்புற, ஊரக பகுதியினர் வளர்ச்சிக்கு 27,922 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற உள்ளாட்சி சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், 4,450 கிமீ சாலைகள் சீரமைக்க 2500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • வடசென்னை பகுதியில் வளர்ச்சி திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • சென்னை அருகே பூந்தமல்லி பகுதியில் அதிநவீனத் திரைப்பட நகரம் அமைக்கும் பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை சுற்றுவட்டார பகுதி நீர்நிலைகளை பாதுகாக்க, வங்கக்கடலில் கலக்கும் அடையாற்றை மீட்டெடுக்க அரசு தனியார் பங்களிப்போடு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2024 – 25ஆம் ஆண்டுக்கு 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • காலை உணவு திட்டத்திற்கு 2024-25ஆம் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை நீர்வளத்துறை சார்பில் ரூ.350 ஒதுக்கீடு.
  • கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையில் மெட்ரோ ரயில்சேவை திட்டத்திற்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு.
  • உயர்கல்வித்துறைக்கு அரசு 8,212 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • சென்னை கடற்கரையில் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • தஞ்சாவூரில் ரூ.120 கோடி செலவீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
  • 2025 மார்ச் மாதம் தமிழகத்தின் மொத்த கடனானது 8.83 லட்சம் கோடி ரூபாயாக தான் இருக்கும்.
  • தமிழக விளையாட்டுத்துறைக்கு 440 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கோவையில் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 1,100 கோடி ரூபாய் செலவீட்டில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது.
  • ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
  • தமிழத்தில் 16 இடங்களில் புறவழிச்சாலைகள் அமைக்க 665 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கடல்சார் வளங்களை பாதுகாக்க 1,675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 27 ஆயிரம் தேயிலை சிறு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஆதி திராவிட இளைஞர்களுக்கு 35 சதவீத மானியத்துடன் 10  லட்சம் வரையில் கடன்பெறலாம். இத்திட்டத்திற்கு 50  ரூபாய் ஒதுக்கீடு.
  • 1000 மாணவர்களுக்கு குடிமை பணியியல் தேர்வுக்கு (UPSC) பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

Recent Posts

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

5 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

10 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

11 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

12 hours ago