TNbudget2023-24 Live : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Published by
செந்தில்குமார்

தமிழக  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் 2023-24க்கான பட்ஜெட் உரையின் முக்கிய நிகழ்வுகளை காண்போம்.

  • முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 35.8 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவார்கள்.
  • பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில்களின் பெருந்திட்டப் பணிகள் ரூ.485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.
  • வரும் செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து மகளிர் உரிமைத்தொகை மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4% இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
  • ரூ.4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
  • அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச இணைய சேவைகள் (WiFi) வழங்கப்படும்.
  • அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அனைத்து ஊராட்சி, நகர்ப்புற பகுதிகளில், நலத்திட்ட உதவிகளை பெற முகாம்கள் அமைக்கப்படும்.
  • ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சியில் தோல் (லெதர்) அல்லாத காலணிகளை தயாரிக்கும் மேலும் இரண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளது, இதனால் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
  • 2023-24 நிதியாண்டில் தொழில் துறைக்கு ரூ.3,200 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒகேனக்கல் மற்றும் பூம்புகார் சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் 574 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
  • அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு உருவாக்கியுள்ள சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
  • ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
  • 2030ஆம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் மெகா மின் திட்டத்தை உருவாக்க ரூ.77,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (TANGEDCO) மானியமாக ரூ 14,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் நிதியமைச்சர் தெரிவித்தார்.
  • விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும்.
  • 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் மற்றும் மேலும் 500 பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வழபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்!.
  • ஒவ்வொரு ஆண்டும், 1000 சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தயாராக 10 மாதங்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கு ரூ.10 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
  • சிவில் சர்வீஸ் விண்ணப்பதாரர்கள் மெயின் தேர்வுக்கு தயார் செய்ய மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,000 வழங்கப்படும்.
  • கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சென்னை மாநகராட்சியில் பொதுக் கழிப்பறையின் வெற்றியின் அடிப்படையில் பொதுக் கழிப்பறைகளைப் பராமரிக்கும் திட்டம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சென்னை மாநகராட்சி இரண்டு மண்டலங்களில் ரூ.430 கோடி செலவில் கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது
  • பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும் இதனை சரி செய்ய, ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும்.
  • வட சென்னை வளர்ச்சித்திட்டம் ரூ.1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
  • சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் ரூ.621 கோடியில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும் என்றும் சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
  • சென்னை கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள மீள்குடியேற்ற காலனிகளில் 20 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
  • சென்னையில் ரூ.320 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ஏபிசி திட்டத்தை வலுப்படுத்தவும், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கோவை மற்றும் மதுரைக்கு ‘எழில்மிகு கோயம்புத்தூர் மற்றும் மதுரை’ என்ற தலைப்பில் திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் தொடங்கப்படும்.
  • அடையாறு-கூவம் ஆறுகளின் 44 கிமீ நீளத்தை அழகுபடுத்தும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் ரூ.1,500 செலவில் மேற்கொள்ளப்படும். அடையாறு ஆற்றின் இருபுறமும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • கோவையில் செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்.
  • மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் நிதியில் சர்வதேச பறவைகள் மையம் நிறுவப்படும்.
  • 5,145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.
  • தங்கம் மற்றும் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.3,993 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படவுள்ளது. இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும்.
  • கடல் அரிப்பு மற்றும் கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளது.
  • பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மாணியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.24,712 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் காலை உணவு திட்டத்தை தொடங்கும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
  • சென்னையில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும் என்றும் இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும் என்றும் கூறப்படுள்ளது.
  • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
  • பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படவுள்ளது.
  • 54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்.
  • சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
  • இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும், இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்.
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை கிண்டியில் கட்டப்படும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.
  • மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படவுள்ளது.
  • தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும்.
  • இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் நலன்:

போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்:

  1. வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்.
  2. தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்.
  3. தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  4. இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம்.
  5. அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
  6. அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்திட ₹5 கோடி நிதி ஒதுக்கீடு.

வருவாய் பற்றாக்குறை :

கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம், வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும்.

அதிமுக வெளிநடப்பு :

தமிழக  சட்டப்பேரவையில் 2023-24க்கான பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி தமிழக சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்:

தமிழக  சட்டப்பேரவையில் 2023-24க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள வேளாண்மைத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 2-வது முழு பட்ஜெட் தாக்கல் மற்றும் அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

8 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

9 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

11 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

12 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

12 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago