தமிழ்நாடு பட்ஜெட் 2022-2023 – எந்தெந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு! முழு விவரம் உள்ளே..

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் சுமார் 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்.  சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் வரும் 24ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அவை அலுவல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 24ல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் மற்றும் முதலமைச்சரின் பதிலுரை இடம்பெறும் என்றும் அறிவித்தார்.

#TNBudget2022 – இன்று தாக்கலான தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு? இதோ:

  • தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • பெரியாரின் சிந்தனைகள், 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும். தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு.
  • கொற்கையில் ரூ.5 கோடி செலவில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.
  • தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7338 கோடி ஒதுக்கீடு.
  • பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுக்கீடு.
  • வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு.
  • பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு.
  • குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
  • தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது, அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்.
  • காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.1,000 கோடி செலவில் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு ரூ.849 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.
  • மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு மானியமாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு.
  • ஏழை மக்களுக்கான வீடுகளை கட்ட ரூ.2,030 கோடி ஒதுக்கீடு.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி ஒதுக்கீடு.
  • துறைமுக சாலை திட்டம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • மின்கட்டண மானியமாக ரூ.9,379 கோடியை அரசு வழங்கும்.
  • சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு.
  • சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடிநிதி ஒதுக்கீடு.
  • இந்து சமய அறநிலையத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.340.87 கோடி ஒதுக்கீடு.
  • தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க, புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.
  • தீயணைப்புத்துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிப்பு.
  • உயர்கல்வித்துறைக்கு 5,668.89 கோடி ஒதுக்கீடு.
  • 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்காக ரூ.204 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

10 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

23 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

34 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

41 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

56 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago