தமிழக பாஜக தலைவர் தமிழிசை நீக்கமா ..!பாஜகவில் வட்டாரத்தில் உச்சகட்ட குழப்பம்…!
தமிழக பாஜக தலைவராக, எஸ்.வி.சேகர் நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். இவர் 2014 ஆகஸ்ட் முதல் இருந்து வருகிறார்.
எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர், காமெடி நடிகர் ஆவார்.இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பல இடங்களில் அவதூறு வழக்கு தொடரபட்டது.வழக்குகளும் நடைபெற்று வருகிறது.
அதேபோல் தமிழக பாஜக தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் ஏற்றுக்கொண்டு தற்போது உள்ள சதவீதத்தை விட அதிகமான சதவீதம் ஓட்டு வாங்கி காட்ட முடியும் என்று அதிரடியாக தெரிவித்தார்.
அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு தமிழக பாஜக தலைவராக, எஸ்.வி.சேகர் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.